இனி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2355; பொதுமக்கள் அதிர்ச்சி!!

 
Commercial-Gas

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ. 2,253-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 102.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2253-ல் இருந்து ரூ.2355.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 655 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

From around the web