யூடியூப் சேனலுக்கு வீவர்ஸ் இல்லை... விரகத்தியில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்!!

 
Telangana

தெலுங்கானாவில் தான் தொடங்கிய யூடியூப் சேனலுக்கு வரவேற்பு கிடைக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைராபாத் பகுதியைச் சேர்ந்தவர் தீனா (23). ஐஐஐடிஎம்மில் 3-ம் ஆண்டு படித்து வந்த இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

jump

படிப்பில் சிறந்த விளங்கிய மாணவன் தீனா தன்னுடைய முயற்சியால் யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். அதில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூடியூப் சேனலுக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பு இல்லை.

இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட தீனா, நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் 5-வது மாடிக்குச் சென்ற தீனா அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead-body

இதுகுறித்து தகவல் அறிந்த ஐராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web