நாளை நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு!!

 
Neet

நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

Neet

இத்தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் என பல்வேறு பயிற்சி நிறுவனங்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியியல் 90 என நீட் வினாத்தாள் தொகுப்பு 180 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு வினாவும் 4 மதிப்பெண்கள் உடையது. சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும், தவறான விடைக்கு மொத்த மதிப்பெண்களில் இருந்து ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

Neet

இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தேச விடைகளை neet.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. உத்தேச விடைகள் தொடர்பாக எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

From around the web