குரங்கு அம்மை நோய் தடுப்பு வழிகாட்டுதல்கள் - ஒன்றிய அரசு வெளியீடு!

 
Monkey-pox

இந்தியாவில் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று குறித்த புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

கடந்த மாதம் துபாயிலிருந்து கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயதான வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மலப்புரம், கண்ணூரை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் இந்த நோய் பரவியது. இதுவரை நாட்டின் மொத்த குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Monkey-pox

இந்நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

யாருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் ?
குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு குரங்கம்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை:

  • குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளியை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
  • சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுதல்
  • குரங்கு அம்மை நோய் பாதித்த நோயாளிகளின் அருகில் இருக்கும் போது, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுதல்.
  • சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

Monkey-pox

குரங்கு அம்மை நோய் செய்யக் கூடாதவை:

  • குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது.
  • குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.
  • குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்.
  • குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

From around the web