மிக்-21 போர் விமானம் கோர விபத்து; விமானப்படை வீரர்கள் 2 பேர் பலி

 
MiG-21

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து, இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

MiG-21

நேற்று இரவு 9 மணியளவில் அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் எரிந்து நாசமானதில் 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கிருகி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.


விமானிகள் இருவரின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web