உயிரிழந்த காதலியுடன் திருமணம்... அப்படியே கலங்கி போன நெட்டிசன்கள்! நெகிழ்ச்சி வீடியோ

 
Assam

அசாமில் நடந்த ஒரு துக்கமான காதல் திருமணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது.

அசாம் மாநிலம் கௌகாத்தி நகரைச் சேர்ந்தவர் பிதுபன் தமுளி (27). இந்த இளைஞர், வெள்ளை போர்வையில் உயிரிழந்து படுத்திருக்கும் பிராத்தனா போரா என்ற அவரின் காதலியின் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் குங்குமத்தை வைக்கிறார். 

Assam

பின்னர், பிரத்தானாவிற்கு வெள்ளை மாலையை ஒன்றையும் அணிவித்துக்கொண்டு, பிரத்தானாவின் ஒப்புதலை வாங்குவது போன்று செய்து, தனக்கும் ஒரு மாலையை அவர் அணிவித்துக்கொண்டு, திருமண சடங்கை நிறைவேற்றினார். 

இதையடுத்து தனது காதலியை உண்மையாக உருகி உருகிக் காதலித்ததாகத் தெரிவித்த அந்த இளைஞர், அவரைத் தவிர வேறு எந்தவொரு பெண்ணையும் தனது துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இனிமேல் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருப்பேன் என்று இறந்த காதலி முன் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து, பிராத்தனா போராவின் குடும்பத்தினர் கூறும்போது,"பிதுபன் - பிராத்தனா ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விவகாரம் எங்களுக்கு் தெரியும், பிதுபன் வீட்டாருக்கும் தெரியும். நாங்கள் இணைந்து அவர்களின் திருமணத்திற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக பிராத்தனா உயிரிழந்துவிட்டார்" என்றனர்.

மேலும், பிராத்தனாவின் உறவினர் சுபோன் போரா,"சில நாள்களுக்கு முன்பிருந்து பிராத்தனாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்துள்ளது.. அவருக்கு கௌகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். அவரை காப்பாற்ற நடத்திய அத்தனை போராட்டங்களும் வீணானது. கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 18) சிகிச்சை பலனின்றி பிராத்தனா உயிரிழந்துவிட்டார். 


பிராத்தனாவின் உடலை வீட்டில் வைத்து மரியாதை செலுத்திவந்த போது, பிதுபன் அங்கு திருமணத்திற்கு தேவையான பொருள்களுடன் வந்தார். வந்தவுடன், நான் பிராத்தனாவை திருமணம் செய்துகொள்ள போகிறேன். நாங்கள் அவரிடம் ஒன்றுமே கூறவில்லை, இது எங்கள் கற்பனைக்கும் எட்டாதது. எனது தங்கையை இவ்வளவு ஆழமாக வேறு யாரும் காதலிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், அவர்களின் காதலின் ஆழத்தை அன்று நாங்கள் பார்த்தோம். 

பிதுபன் அந்த திருமண சடங்கை மேற்கொள்ளும்போது விடாமல் அழுதுகொண்டேதான் இருந்தார். எனது தங்கை பிதுபனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். அதை, பிதுபன் நிறைவேற்றியுள்ளார்" என்ற உருக்கமாக தெரிவித்தார். 

மேலும், பிராத்தனாவின் உடல் முன்னிலையில், வேறு யாரையும் இந்த வாழ்நாளில் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என உறுதிமொழி எடுத்ததும் பலரின் மனதை உலுக்கியுள்ளது. 

From around the web