பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம்... சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!! வீடியோ

 
Sabarimala

சபரிமலையில் ஐயப்பன் கோவில் மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (ஜன. 14) நடைபெற்றது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மகாராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

Sabarimala

முன்னதாக இன்று மகர விளக்கு பூஜையை ஒட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட திரு ஆபரண பெட்டி வரலாற்று சிறப்பு மிக்க சரக்கொத்திக்கு 5.30மணிக்கு வந்து சேர்ந்தது.

இதைத்தொடர்ந்து, மாலை 6.45 மணியளவில் கோவில் சன்னதிக்கு எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி சொரூபமாக காட்சியளித்தார்.  இதனை சரண கோஷம் எழுப்பி, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பம்பை, புல்மேடு உட்பட 9 இடங்களில் ஜோதியை காண முடியும் என்ற போதும், பெரும்பான்மையான பக்தர்கள் ஜயப்பன் சன்னதியில் இருந்தே காண விரும்புவதால் கூட்டம் அலைமோதியது. முன்னதாக மகரஜோதி தரிசனத்தை காண நடிகர்கள் ஜெய்ராம், ஜெயம்ரவி, காளிதாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

From around the web