இஸ்லாமியர் கடைகளில் ஆண்மை குறைவு தேநீர்... சர்ச்சை பேச்சால் முன்னாள் எம்.எல்.ஏ கைது

 
Sales-of-impotence-tea-Controversially-speaking-former-MLA

கேரளாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், வகுப்புவாத மோதல்களை தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேரளாவில் கடந்த வெள்ளி கிழமை அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் பூஞ்சார் தொகுதியின் முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகளில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் பொருட்கள் தடவிய தேநீர் விற்பனை செய்யப்படுவதாகவும், நாட்டை கைப்பற்றி கட்டுப்படுத்தும் முயற்சியாக இது நடைபெறுகிறது என கூறினார். இதனால் கேரளாவில் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜார்ஜுக்கு எதிராக கேரள போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை நந்தவனம் பகுதியில் உள்ள ஏ.ஆர். கேம்ப் என்ற இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையிலான அவரது பேச்சால் திருவனந்தபுரம் நகரின் கோட்டை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து 153ஏ பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் உள்பட) வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.சி. ஜார்ஜ் கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

From around the web