கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி திடீர் மரணம்!! முதல்வர் இரங்கல்!

 
umeshkatti

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. இதில் வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி பதவி வகித்தார். பாஜகவின் மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்தார்.

umesh

நேற்று வழக்கமான அலுவல் முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் உமேஷ் கட்டி, இரவு உணவுக்குப் பின் கழிப்பறைக்குக் சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிப் பார்த்தார். ஆனால், எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது உமேஷ் கட்டி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட உமேஷ் கட்டி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் மரணம் அடைந்தார். இவரது திடீர் இறப்பு செய்தி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

karnataka-CM

மரணம் அடைந்த அமைச்சர் உமேஷ் கட்டிக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மறைந்த உமேஷ் கட்டியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும். பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web