14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் தேர்வு 

 
Jagadeep-thangar

இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் தேர்வாகி உள்ளார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Alva-Thangar

ஜூலை 6-ம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தங்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

Jagadeep-Thangar

அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

From around the web