கார் விபத்தில் இறந்த கணவர்: துக்கம் தாங்காமல் மனைவி தன் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை..!

 
Wife-child-commits-suicide-without-mourning-husband-death

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தன் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் தீயணைப்புத்துறை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் கங்காதரா கம்மாரா (வயது 36). இவர் நேற்று இரவு மங்களூரு நகரில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை யை கடந்து செல்ல முயன்ற போது கார் ஒன்று  மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக மங்களூரு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கங்காதரா கம்மாராவின் மனைவி தனது கணவர் இறந்த தகவலை கேட்டதும் தன் 6 வயது அபிராம் என்ற மகனை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது சம்பந்தமாக லிங்கசூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web