உத்தரபிரதேசத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம்... ரத்த காயத்துடன் நிர்வாணமாக 2 கிலோ மீட்டர் நடந்த கொடூரம்!!

 
UP

உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த காயத்துடன் நிர்வாணமாக 2 கிலோ மீட்டர் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் போஜ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சமீபத்தில் சென்றார். அப்போது, 5 இளைஞர்கள் அந்தச் சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், அந்தச் சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்கு செல்லும்படி விரட்டி விட்டு உள்ளனர். 

rape

இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், சிறுமி நிர்வாணமாக சாலையில் நடக்கும் காட்சி உள்ளது. சிறுமி ரத்தம் கொட்டிய நிலையில், சாலையில் நிர்வாணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார்.

ஆனால் சாலையில் அவரை கடந்து சென்றவர்கள் என்ன ஏது என்று விசாரிக்கவில்லை உதவ வரவில்லை பொம்மைகளாக வேடிக்கை பார்த்து உள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து கூறுகையில், வீடு திரும்பிய சிறுமி ரத்த காயத்துடன் இருந்தார். அவருக்கு நடந்த கொடுமையை விவரித்தார். பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிறுமி தனது வீட்டை அடைய அதிக ரத்தப்போக்குடன் நடக்க வேண்டியிருந்தது. கற்பனை செய்து பாருங்கள் அவருக்கு யாரும் உதவவில்லை.


குடும்பத்தினர் புகார் அளிக்க காவல்துறையை அணுகினர், ஆனால் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஹேமந்த் முன் இந்த விஷயத்தை எழுப்பும் வரை எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, செப்டம்பர் 7 -ம் தேதி வழக்கு பதிவு செய்த பின்னர் போலீசார் நடவடிக்கை எடுத்து ஒரு குற்றவாளியை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர்.

From around the web