மழை பெய்ய வேண்டி தவளைக்கு திருமணம்!! சிறப்பு பூஜை செய்த கிராம மக்கள்!!

 
UP

உத்தரபிரதேசத்தில் பருவமழை பொய்த்ததால் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அறங்கேறியுள்ளது.

பருவமழை பெய்ய தாமதமானால் விலங்குகளுக்கு புரோகிதரை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. அதற்கு, கழுதைகள், தவளைகள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

காற்று, மழை, நெருப்பு, கல்வி, காதல், வீரம் என இயற்கையின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் இருப்பதாக நம்பும் வழக்கம் பெரும்பாலான கலாசாரத்தில் உண்டு. மழை கடவுளான வர்ணனுக்கு வழங்கும் படையலாகவே விலங்குகளின் இந்த திருமணம் நடக்கிறது. மதம் சார்ந்த புரோகித மந்திரங்கள் முழங்கவே இதை நடத்துகின்றனர்.

UP

அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள காளிபாரி கோவிலில் நேற்று நடைபெற்ற விழாவில் தவளைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் அமைப்பான இந்து மகாசங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு சடங்கை காண மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

இதுகுறித்து இந்து மகாசங்கத்தைச் சேர்ந்த ரமாகாந்த் வர்மா கூறுகையில், இங்கு தற்போது வறண்ட சூழல் நிலவுகிறது. சாவான் (இந்து காலண்டரில் ஒரு மாதம்) மாதத்தின் 5 நாட்கள் ஏற்கனவே கடந்த நிலையிலும் இதுவரை பருவமழை பெய்யவில்லை. எனவே மழை பெய்ய வேண்டி கடந்த வாரம் ஹவான் பூஜை செய்தோம். இப்போது தவளைகளுக்கு திருமணம் செய்துள்ளோம். இந்த சடங்கு நிச்சயமாக பலனளிக்கும். கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.

UP

மேலும் இந்த சடங்கு நிச்சயமாக பலனளிக்கும் என்றும், வெப்பத்தில் இருந்து விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும் சடங்கை காண வந்த மக்கள் தெரிவித்தனர்.

From around the web