மக்களே முதல்ல இதை படிங்க... செப்டம்பர் மாதத்தில் மட்டும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

 
bank-holiday

செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 14 நாட்களுக்கு மேல் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

RBI

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

செப்டம்பர் 1, 2022 - வியாழன் - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 2, 2022 - வெள்ளி - கோவாவின் பனாஜி வங்கி விடுமுறை
செப்டம்பர் 4, 2022 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6, 2022 - செவ்வாய் - ஜார்கண்ட்,  திருவனந்தபுரம், கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 7, 2022 - புதன் - சிக்கிமில் இந்திரஜாதா விடுமுறை
செப்டம்பர் 8, 2022 - வியாழன் - இந்திரஜாதா சிக்கிம் விடுமுறை
செப்டம்பர் 9, 2022 - வெள்ளி - காங்க்டாங்கில் விடுமுறை
செப்டம்பர் 10, 2022 - 2 வது சனிக்கிழமை, ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி

holiday
செப்டம்பர் 11, 2022 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18, 2022 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 21, 2022 - புதன் - ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்
செப்டம்பர் 24, 2022 - 4 வது சனிக்கிழமை.
செப்டம்பர் 25, 2022 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 26, 2022 - திங்கள் - நவராத்திரி . மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை

From around the web