இலவசம்.. இலவசம்.. ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை அனுமதி இலவசம்!!

 
Tanjore

இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

tour

இதன் தொடர்நச்சியாக 75-வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

central-govt

அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web