பரபரப்பு! ராகுல் காந்தி நடைபயணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!! போலீசார் விசாரணை 

 
Rahul Gandhi
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இனிப்பு கடை வாசலில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 8-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கிய நடைபயணம் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தை கடந்து மகாராஷ்டிராவில் நடைபெற்றது வருகிறது.
Rahul Gandhi
இந்த நிலையில் ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை எழுதியவர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது புரளி என்று சந்தேகிக்ப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
Rahul Gandhi
விரைவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் யாத்திரையை தொடங்க உள்ள நிலையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web