கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்... 19 மாணவர்களுக்கு பாதிப்பு.. அறிகுறி என்ன?

 
Nora Virus

கேரளாவில் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் பாதிப்பு 19 பள்ளி மாணவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டில் படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பள்ளியில் நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறி காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இதில் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Noro virus

மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் வழியாக பரவக்கூடியது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எர்ணாகுளத்தில் 19 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

நோரோவைரஸ் பரவல் மாசுபட்ட உணவு அல்லது நீர் முலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் இவை பரவுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது இவை பரவலாம்.

Noro virus

அறிகுறி என்ன?

கடுமையான தலைவலி, உடல் வலி போன்றவையும் ஏற்படும். நோரோ வைரஸ் பாதித்த 12 முதல் 48 மணி நேரத்தில் அதன் அறிகுறிகள் வெளிப்படும். கடுமையான தலைவலி, உடல் வலி போன்றவையும் ஏற்படும். நோரோ வைரஸ் பாதித்த 12 முதல் 48 மணி நேரத்தில் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.

நோரோ வைரஸ் நமக்கு வராமல் எப்படி தடுப்பது?

  • நோரோ வைரஸ் பரவலை தடுக்க, கைகளை குறைந்தது 20 விநாடிகள் சோப்பு போட்டு சுத்தமான நீரில் கழுவுங்கள். குறிப்பாக கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, டயப்பரை மாற்றிய பிறகு. உணவு தயாரிப்பதற்கு முன்பு, சாப்பிடுவதற்கு முன்பு. ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பயன்படுத்துவது பலனளிக்கும்.
  • தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன்பு நன்றாக ஓடும் நீரில் சுத்தம் செய்யவும்.
  • வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். சூடான உணவுகள் பாதுகாப்பானவை. தெரு உணவுகளை தவிர்க்கவும்.
  • அழுக்கடைந்த பொருள்களை அப்புறப்படுத்துங்கள்.
  • தொற்று உறுதியானால் மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். அறிகுறிகள் நீங்கினாலும் குணமடைந்த சில நாட்கள் வரை மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்கவும்.

From around the web