வீரர்களுக்கு நேர்ந்த கொடூரம்! கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு விநியோகம்

 
food

உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அப்போது கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது. கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

food


ஒரு நிமிட வீடியோவில், ஃபிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்களைக் காட்டப்படுகிறது அதன் வாயிலுக்கு அருகில் உள்ள கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது. மீண்டும் விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்வதைக் காணமுடிகிறது. இரண்டாவது வீடியோ, ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது.

சஹாரன்பூரின் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா, இட நெருக்கடி காரணமாக உணவு மாற்றும் அறையில் (கழிவறை) வைக்கப்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.


அதை கழிவறையில் வைக்கவில்லை, மழை பெய்ததால், நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக உணவை வைக்க வேறு இடம் தேவைப்பட்டது என கூறப்படுகிறது.


இதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மாற்று அறையென்பது கழிப்பறையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழங்கும் விஷயத்தில் அலட்சியத்தைக் கடைபிடித்ததாக அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

From around the web