இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா... ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு!!

 
India

கொரோனா அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரம் என்று பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 12 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் ஆதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,313  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ICV

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Corona-vaccine-for-612-year-olds-from-tomorrow

மேலும் பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

From around the web