கேள்வி தாள் கசிவு இன்றி ஒரே ஒரு தேர்வை உங்களால் நடத்த முடியுமா..? குஜராத் முதல்வருக்கு கெஜ்ரிவால் சவால்

 
Arvind-Kejriwal-in-gujarat

வினாத்தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து ஆம் அத்மி கட்சியின் பார்வை குஜராத் பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில், குஜராத்தில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடும் கெஜ்ரிவால், வினாத்தாள் கசிவு இன்றி ஒரு பள்ளி தேர்வைக் கூட அரசால் நடத்த முடியாது என்று  விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் கூறுகையில், “குஜராத்தில் 6 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் பள்ளிகளை மாற்றும் விதத்தில் குஜராத்தின் எதிர்காலத்தை மாற்றலாம்.

குஜராத்தில் கேள்வி தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன். தேர்வின்போது கேள்வி தாள் கசிந்ததில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது. குஜராத் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பில் நான் பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றால் நீங்கள் என்னை வெளியேற்றலாம்” என்றார்

From around the web