ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 11 பேர் பலி, 25 பேர் படுகாயம்

 
Kashmir

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதானை நோக்கி இன்று காலை 36 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாஜியன் எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிபாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Accident

பெரும் சத்தத்துடன் பேருந்து விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ராணுவம், உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறினார்.

Kashmir

இதுகுறித்து மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க காவல்துறை மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web