15 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்த சகோதரர்கள்!! தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
rape

தெலுங்கானாவில் மைனர் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி பகுதியில் மைனர் சிறுமியை 2 சகோதரர்கள் பலமுறை பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. 27 மற்றும் 22 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

sex harrasment

மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, கடந்த காலங்களில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவரின் வீடும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

arrest

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 4-ம் தேதி இரவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை 5-ம் தேதி பிற்பகலில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

From around the web