மும்பையில் பரபரப்பு... அம்பானி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

 
Reliance-school

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் லேண்ட்லைன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

phone

அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார். பின்னர் உடனே அழைப்பைத் துண்டித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி வளாகத்தில் சோதனை செய்தனர்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) (பி) மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் குற்றவாளியை கைது செய்வதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Police-arrested

கடந்த அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், அம்பானி குடும்பத்தினரை கொலை செய்யப் போவதாகவும் தொலைப்பேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web