இளம்பெண் கழுத்து அறுத்து கொலை முயற்சி... எம்எல்ஏ உதவியாளரின் வெறிச்செயல்!!

 
Telangana

தெலங்கானாவில் இளம்பெண் கழுத்தை பீர்பாட்டிலால் அறுத்துக் கொலை செய்ய முயன்ற எம்எல்ஏவின் உதவியாளரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மாகண்டி கோபிநாத். இவருடைய உதவியாளராக விஜயஷிம்கா என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டப்பட்டது. அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிஷா(35) விஜயஷிம்காவுக்கு அறிமுகமாகி உள்ளார். நிஷாவுக்கு ஏற்கனவே திருணமாகி சூரஜ் என்ற கணவர் உள்ளார்.

Murder

இந்த நிலையில், இன்று அதிகாலை மது போதையில் இருந்த விஜயஷிம்கா, நிஷா வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால், அதற்கு நிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயஷிம்கா, பீர் பாட்டிலை உடைத்து நிஷா கழுத்தை அறுத்துள்ளார். 

இதனால் ரத்தம் பீறிடவும், அங்கிருந்து தப்பியோடி விட்டார் விஜயஷிம்கா. இதில் படுகாயம் அடைந்த நிஷா, கணவர் சூரஜ்க்கு போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சூரஜ், நிஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 

Police

இந்த சம்பவம் தொடர்பாக சூரஜ் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சட்டதன்ற உறுப்பினரின் உதவியாளரின் இந்த வெறிச்செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web