நாசிக் சுங்கச்சாவடியில்.. பத்ரகாளியாக மாறிய பெண்.!! வைரல் வீடியோ 

 
Nashik
மகாராஷ்டிரவில் உள்ள பெண் சுங்கச்சாவடி ஊழியரின் தலைமுடியை ஒரு பெண் அடித்து, அடித்து, இழுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் டோல் பிளாசா ஒன்று இயங்கி வருகிறது. அப்போது அங்கு வந்த காரில் இருந்த பெண்ணுக்கும் சுங்கச்சாவடியில் இருந்த பெண் ஊழியருக்கம் இடையே கட்டணம் செலுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
Nashik
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் மடைந்த காரில் வந்த பெண், சுங்கச்சாவடி பெண் ஊழியரின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளார். இந்த காட்சி அனைத்தும் சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 2 நிமிட 47 வினாடிகள் கொண்ட வீடியோவில், காரில் வந்த பெண் சுங்கச்சாவடி பணியாளரின் சட்டையை சிஆர்பிஎஃப் கணவர் மற்றும் பிற பார்வையாளர்கள் பார்க்கும்போது அந்தப் பெண்மணியைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

மேலும், ​​​​இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்துக் கொண்டு தாக்கி கொள்வதை அந்த வீடியோவில் காணலாம். பெண் சுங்கச்சாவடி ஊழியரிடம் அந்த பெண்ணின் கணவர் தகராறு செய்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து நாசிக் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

From around the web