ஆம்புலன்ஸுக்கு அதிக கட்டணம்... தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன்!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

 
West bengal

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் வசூலித்த காரணத்தால் தனது தாயின் உடலை மகன் தோளில் சுமந்து நடந்தே சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கிராந்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜாய் கிருஷ்ண தீவான். இவரது மனைவி லக்கி தீவான் (72). இந்த தம்பதிக்கு ராம் பிரசாத் தீவான் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ஜாய் கிருஷ்ணா தீவானின் மனைவி லக்கி தீவானுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கடந்த, இரு தினங்களுக்கு முன்னர் ஜல்பாய்கூரி மாவட்ட அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டார்.

West Bengal

அங்கு லக்கி தீவான் சிசிக்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உடலை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கணவர் ஜாய் கிருஷ்ணா, மகன் ராம் பிரசாத் ஆம்புலன்ஸை விசாரித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து இவர்களது வீடு 40 கி.மீ. தொலைவில் உள்ளது. அப்படி இருக்க வரும்போது இவர்கள் ரூ.900 கட்டணத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

அதேவேளை, உடலை சொந்த ஊருக்க கொண்டு செல்ல ரூ.3 ஆயிரம் கட்டணம் தர வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் விடாப்பிடியாக கூறியுள்ளனர். தந்தை மகன் இருவரிடமும் ரூ.1,200 தான் பணம் இருந்த நிலையில், வேறு வழியின்றி தாயின் உடலை தோளில் போட்டு சுமந்து ஊர் நோக்கி ராம் பிரசாத் நடக்கத் தொடங்கியுள்ளார். சில கிமீ தூரம் இவர்கள் இவ்வாறு நடந்து சென்ற நிலையில், அவ்வழியாக சென்ற நபர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

அதை பார்த்த ஒரு தொண்டு நிறுவனம் இவர்களை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்தது. உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது சொந்து ஊருக்கு கட்டணம் இல்லாமல் கொண்டு சேர்த்தது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய சம்பவம் தங்கள் கவனத்தை மீறி நடைபெற்றதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடைபெறும் எனவும் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

From around the web