பைக்கில் சென்றவரை ஓங்கி உதைத்த பெண்... தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம்.. வைரல் வீடியோ

 
Mumbai

மும்பையில் இளம்பெண் ஒருவர், பக்கத்தில் சென்று கொண்டிருந்த பைக்கை உதைத்த போது நிலைத்தடுமாறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் தாறுமாறாக போகவே, பின்னால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ‘ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்’ எனக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Mumbai

பின்னர் அவர்கள் தங்கள் வழியில் செல்ல, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ தங்களை பார்த்து செல்லுமாறு கூறிய இளைஞரின் பைக்கை எட்டி உதைக்க முற்பட்டார். ஆனால் அடுத்த நொடியே இவர் நிலைத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து தலைகுப்புற விழுகிறார்.

இதனை பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. வண்டியை தாறுமாறாக ஓட்டியதை கேள்வி கேட்டதால் வெகுண்டெழுந்து அந்த பெண் செய்த தவறான செயல், அவருக்கே பாதகமாக மாறியுள்ளது.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது ஒருபுறம் இருக்க, வரம்பு மீறி சென்ற அந்தப் பெண்ணை சமூகதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

From around the web