தலைமுடி உதிர்வால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!! சிகிச்சை அளித்த மருத்துவர் தான் காரணம் பரபரப்பு கடிதம்

 
Kerala

கேரளாவில் தலைமுடி, புருவ முடிகள் உதிர்ந்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு வடக்கு கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (29). மெக்கானிக் வேலை செய்து வந்த இவருக்கு தலைமுடி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் கோழிக்கோடில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 
Kerala
இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தலைமுடி பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால் அவர் சிகிச்சை எடுத்து வந்தாலும் தலைமுடி பிரச்சனை நிற்கவில்லை. இதை அந்த மருத்துவரிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் மருத்துவர் இதை கேட்ட பின் மேலும் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். ஆனால் கண் புருவத்தில் இருந்தும் முடிகள் உதிர்ந்ததால் பிரசாந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவரது திருமணத்துக்கு பெண் பார்க்க்கும் திட்டமும் முடங்கியது. தலைமுடி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும், நணபர்களையும் சந்திக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், தலைமுடி பிரச்சனை காரணமாக திருமணத்துக்கு தடை ஏற்படுவதாக நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
Suicide
அவர் எழுதியிருந்த கடிதத்தில், என்னால் வீட்டை விட்டே வெளியில் வர முடியவில்லை. தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தான் இறப்பிற்கு காரணம் என எழுதியிருந்தார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரசாந்த் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

From around the web