சத்தீஸ்கரில் அரியவகை ஆரஞ்சு நிற வெளவால்! வைரலாகும் புகைப்படம்

 
Chhattisgarh

சத்தீஸ்கரில் உள்ள கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் அரியவகை ஆரஞ்சு நிற வௌவால் மற்றும் அழிந்து வரும் ஓநாய் இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் அரியவகை ஆரஞ்சு நிற வௌவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் அழிந்து வரும் நிலையில் உள்ள ஓநாயும் காணப்படுவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

orange bat

இதுகுறித்து கங்கேர்காட்டி தேசிய பூங்காவின் இயக்குநர் கன்வீர் தரம்ஷீல் கூறுகையில், ஓநாய்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காப்பாற்றவும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விலங்குகள் குறித்து மக்கள் பார்வையிடுவதற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வனத்துறையினர் தனித்தன்மை வாய்ந்த மற்றும் அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க காட்டின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்களை பொறுத்தியுள்ளனர். அதில் விலங்குகளின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி வருகிறது என்று கூறினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web