படிப்பில் மகளுக்கு போட்டியாக இருந்த சக மாணவனுக்கு விஷம்!! மாணவனின் உடலுக்கு இன்று மாலை பிரேத பரிசோதனை

 
Karaikal

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் காரைக்கால் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் சென்ற சினுவன் மதியம் வீடு திரும்பிய நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் காவலாளி கூல்டிரிங்ஸ் கொடுத்ததாகவும், அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.

Karaikal

மேலும் பள்ளியில் சென்று விசாரித்தபோது மாணவனின் பெற்றோர்கள் கொடுத்த குளிர்பானம் மட்டுமே மாணவருக்கு வழங்கப்பட்டதாக பள்ளியில் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாங்கள் குளிர்பானம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, மாணவன் பால மணிகண்டன் உறவினர் என ஒருவர் குளிர்பானம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் மாலதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சகாய ராணி விக்டோரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால மணிகண்டன் வகுப்பில் சிறந்த மாணவனாக உள்ளதால் சகாய ராணி விக்டோரியாவின் மகளுக்கும் சிறுவனுக்கும் போட்டி இருந்து வந்துள்ள நிலையில் குளிர்பானத்தின் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karaikal

இதனிடையே விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர் உறுதியளித்தார்.

இதனையடுத்து மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பள்ளி மாணவனின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று மாலை பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

From around the web