மத்திய அரசில் 9,223 காலியிடங்கள்... 10ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

 
CRPF

மத்திய ரிசர்வ் காவல் படையில் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் பிரிவில் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்/ட்ரேட்ஸ்மேன்) 

காலியிடங்கள்: 9212 (ஆண்கள் 9105, பெண்கள் 107) கான்ஸ்டபிள் (Pioneer)-11

CRPF

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எம்எம்வி பணிக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Application

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.5.2023 

மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

From around the web