லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலி!! அகமதாபாத்தில் சோகம்!

 
Gujarat

அகமதாபாத்தில் உள்ள கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று போது லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஆஸ்பயர்-2 என்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து கட்டிடம் கட்டும் போது லிப்ட் உடைந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Gujarat

இந்த விபத்தில் சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி ஆகிய 7 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டதுள்ளது.

இதில் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gujarat

இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத் தீயணைப்பு துறை அதிகாரி ஜெயஷ் காடியா, “அகமதாபாத் அருகே லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web