தெரு நாய்கள் கடித்து 7 மாத குழந்தை பலி.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
MP

மத்திய பிரதேசத்தில் தெரு நாய்கள் கூட்டம் ஒன்று தாக்கிக் கடித்ததால் 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அயோத்தி நகர் பகுதியில், 7 மாத ஆண் குழந்தையை தெரு நாய்கள் கடித்து இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருப்பது குணா மாவட்டத்தைச் சேர்ந்த கூழித் தொழிலாளி ஒருவரின் குழந்தை என்பது தெரியவந்தது.

Dog

இந்தச் சம்பவம் குறித்து அயோத்தியா நகர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ் நில்ஹர் கூறுகையில், “இறந்த குழந்தை, கூலித் தொழிலாளியின் குடும்பத்தினைச் சேர்ந்தது. சம்பவத்தன்று குழந்தையின் தாய் அதனை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்களின் கூட்டம் ஒன்று குழந்தையைக் கடித்து இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தி எச்சரிக்கை செய்தனர்.

அதற்குள் அந்த நாய்கள் கூட்டம், குழந்தையின் கையைத் துண்டாக்கியிருந்தன. குழந்தையை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது. குனா மாவட்டத்தைச் சேர்ந்த அக்கூலித் தொழிலாளி குடும்பத்தினர், குழந்தையை போபால் அருகே உள்ள ஒரு கிராமத்தில் புதைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

baby

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகம் ரூ.50,000 வழங்கியுள்ளது. மேலும் 50,000 விரைவில் வழங்கப்படும். போபால் மாநகராட்சி (BMC) அயோத்தியா நகர் பகுதியில் இருந்து 8 தெரு நாய்களை பிடித்துள்ளது. மேலும்,தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

From around the web