790 ரயில்வே காலிப்பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு போதும்.. உடனே விண்ணப்பீங்க!

 
railway

தெற்கு ரயில்வேயில்  ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager பணிகளுக்கென 790 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவியின் பெயர்: ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager

காலிப்பணியிடங்கள்: 790

jobs

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 05, Pay Level 2, Pay Level 06 அளவின் படி மாதம் சம்பளம் பெறுவார்கள்.

application

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Aptitude Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://gdce.srhqpb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2023

From around the web