7,500 காலிப்பணியிடங்கள்... மாதம் ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை சம்பளம்.. பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட SSC!!

 
SSC

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) 7,500-க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகியது. இதையடுத்து, இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மே 3 ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SSC காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம்  Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

jobs

வயது வரம்பு: 18-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். 

CGL ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை:

SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

application

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/எஸ்சி/எஸ்டி/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும். முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும். போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும். ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்.

From around the web