7500 காலியிடங்கள்... மத்திய அரசில் வேலைவாய்ப்பு... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!

 
SSC

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 7,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இவற்றில் மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, ரயில்வே துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களும், மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் (Assistant Superintendent) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SSC

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 01.08.2023 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது. சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

Pay Level-8 (₹ 47600 to 151100)

Pay Level-7 (₹ 44900 to 142400)

Pay Level-6 (₹ 35400 to 112400)

Pay Level-5 (₹ 29200 to 92300)

Pay Level-4 (₹ 25500 to 81100)

application

தேர்வு முறை: கணினி வழியில் நடைபெறும் நிலை I தேர்வு, நிலை- II தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் Merit List தயாரிக்கப்படும். நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

From around the web