வேலி தாண்டிய 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள்! என்ன செய்யப் போகிறார் பிரதமர் மோடி?

 
Modi Trump

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே 26 ஆணைகளைப் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்று, சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவுக்குள் எல்லை தாண்டி வந்தவர்களை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்புவதாகும்.இப்படி எல்லை தாண்டி வந்தவர்களில் 14 லட்சம் பேர் இது வரையிலும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக நாட்டை விட்டு அனுப்பப்படவேண்டியவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் 18 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். மெக்சிகோ வழியாக எல்லைத் தாண்டிச் சென்றவர்கள் என அறியப்படுகிறது.

இந்த 18 ஆயிரம் பேர்களையும் இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ளும் என இந்திய அரசுத் தரப்பில், அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பர்க் நிறுவன செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் மற்றும் ஹெச்1 பி ஊழியர்களுக்கான விசாக்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்ற வகையில் இந்தியா இந்த கூட்டு நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Pew Research Center கணிப்பின் படி சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவுக்குள் நுழைந்து வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமற்ற முறையில் நுழைந்த ஒவ்வொருவரையும் எங்கிருந்து வந்தார்களோ அந்த சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்போம் என்று அதிபர் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார். முதல் தவணையாக 18 ஆயிரம் பேர்களை இந்தியாவுக்குள் திரும்பிப் பெற ஒப்புக்கொண்ட நிலையில் மீது 7 லட்சத்து 7 ஆயிரம் பேர்களை அதிபர் ட்ரம்ப் பும் பிரதமர் மோடியும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

From around the web