710 காலியிடங்கள்.. வங்கி வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்

 
Bank

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கிகளில் காலியாகவுள்ள ‘சிறப்பு அதிகாரி’ பணியிடங்களை நிரப்பவதர்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை வங்களில் ‘சிறப்பு அதிகாரி’ பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கிகளில் காலியாகவுள்ள ‘சிறப்பு அதிகாரி’ பணியிடங்களை நிரப்பவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளன. பணியின் முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

காலியிடம்: விவசாய அதிகாரி - 516, மார்க்கெட்டிங் ஆபிசர் - 100, ஐ.டி. ஆபிசர் - 44, ராஜ்பாஷா அதிகாரி - 25, சட்ட அதிகாரி - 10, எச்.ஆர். / பெர்சனல் ஆபிசர் - 15 என மொத்தம் 710 இடங்கள் உள்ளன.

Bank

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்வு செயல் முறை: காலியாகவுள்ள இடங்கள் நிரப்பும் பணித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு படி நடக்கும். இரண்டு கட்ட தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

  • Preliminary Examination
  • Main Examination
  • Interview

தேர்வு மையம் (பிரிலிமினரி ) : சென்னை, கோவை, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில். (மெயின் தேர்வு): சென்னை, மதுரை, திருநெல்வேலி.

Application

விண்ணப்பிக்கும் முறை: பணிக்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/crpsoxioct22/என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 175. ஏனைய தேர்வர்கள் அனைவருக்கும் ரூ. 850.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.11.2022

From around the web