ஒரே பைக்கில் 7 பேர் பயணம்.. மடக்கி பிடித்த இளைஞருக்கு அபராதம் விதித்த போலீசார்!!

 
Bike

உத்திரப் பிரதேசத்தில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூர் அருகே பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே ஒரு ஆட்டோ விதிகளை மீறி அதி வேகமாக சாலையில் சென்றுள்ளது. இதனையடுத்து ஆட்டோவை துரத்தி சென்று, போலீசார் மடக்கி பிடித்தனர்.

auto

அதில் பயணித்தவர்களை ஆட்டோவில் இருந்து இறங்க கூறிய போது, அந்த ஆட்டோவில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கியதை பார்த்த போது தான் போலீசார் வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஆட்டோவில் 27 பேரை ஏற்றி ஆட்டோ ஓட்டுநர் சவாரி செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து இரு சக்கர வாகனத்தில் 7 பேர் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள அவுரையா மாவட்டத்தில் ஏழு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பக்ரீத் முடிந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க சென்று கொண்டிருப்பதாகவும், வேறு வாகனம் இல்லை என்றும் அந்த நபர் போலீசாரிடம் கெஞ்சினார். வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஹெல்மெட் கூட அணியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு அபராதம் விதித்ததுடன், இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

From around the web