திருமண விழாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

 
Rape

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்ப்டட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் நேற்று நடந்த திருமண விழாவிற்கு 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார். விழா முடிந்து இரவு வீடு திரும்பிய போது, சிறுமியின் உடையில் ரத்தக்கறை இருந்ததை அவரது பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

rape

இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள், தௌசாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சிறுமி தற்போது தௌசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “தௌசா மாவட்டத்தில் 6 வயது சிறுமி அடையாளம் தெரியாதவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

Police

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில், “இந்த வழக்கில் விரைவான விசாரணையை உறுதி செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம். சிறுமி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல சுயநினைவுக்கு வருகிறார்” என்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web