நிர்வாண நிலையில் கிடந்த 6 வயது சிறுவன்.. செங்கலால் அடித்துக் கொன்ற 13 வயது சிறுவன்.. பகீர் சம்பவம்!

 
UP

உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுவனை 13 வயது சிறுவன் செங்கலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் சிவில் லைன் பகுதியில் வசித்து வந்தவர் யோகேந்திரா. இவரது மகன் யோக் (6). வீட்டில் இருந்த யோக் இன்று மதியத்தில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை யோகேந்திரா காணாமல் போன மகனை பல இடங்களில் தேடியுள்ளார்.

boy-dead-body

அப்போது அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே யோக் சடலமாக கிடப்பதை கண்டு யோகேந்திரா அதிர்ச்சி அடைந்தார். சிறுவன் யோகின் தலையில் செங்கலால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் உடலில் ஆடையின்றி நிர்வாண நிலையில் செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

boy-dead-body

விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் யோக்கை செங்கலால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த 13 வயது சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுவனை 13 வயது சிறுவன் அடித்துக்கொன்றதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

From around the web