616 காலியிடங்கள்... 10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்.. ரைபிள் படைப் பிரிவில் வேலைவாய்ப்பு!

இந்திய துணை ராணுவப் படைப் பிரிவில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் பல்வேறு துறைகளில் உள்ள 616 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அசாம் ரைபிள் படைப் பிரிவில் செவிலிய உதவியாளர், ஆய்வக உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவி | கல்வித்தகுதி |
Trade - Bridge and Road | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் என்ஜினியரிங் படிப்பில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். |
Trade - Religious Teacher | பட்டப்படிப்புத் தேர்ச்சியுடன் சமஸ்கிருதத்தில் Madhyama சான்றிதழ் அல்லது இந்தியில் Bhusan சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
Trade - Clerk | 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்ச செய்யும் திறன் இருக்க வேண்டும். |
Trade - Operator Radio and Line | Radio Mechanic/ Radio & TV Mechanic / Electronics ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைக் கொண்டு 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Trade - Radio Mechanic | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Trade - Personal Assistant | 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி திறன் கொண்டிருக்க வேண்டும். |
Trade - Laborartory assistant | அறிவியல், கணிதம், ஆங்கிலம், விலங்கியல் ஆகிய பாடங்களுடன் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Trade - Nursing Assistant | அறிவியல், கணிதம், ஆங்கிலம், விலங்கியல் ஆகிய பாடங்களுடன் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Trade - Veterinary Field Assistant | 10, +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கால்நடை படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கால்நடை துறையில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
Trade - Pharmacist | 10,+2 வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருந்தாளுனர் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். |
Trade - Washermen | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Trade - Female safai | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Trade - Barber | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Trade - Cook | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Trade - Male safai | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Trade - X ray Assistant | 10 வகுப்புத் தேர்ச்சியுடன், Radiology படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
Trade - Plumber | 10 வகுப்புத் தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
Trade - Surveyor | 10 வகுப்புத் தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
Trade - ELectrician (ஆண்கள் மட்டும்) | 10 வகுப்புத் தேர்ச்சியுடன் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் |
www.assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2023 மார்ச் 18 நள்ளிரவு 11:59 மணி வரை. அசாம் ரைஃபிள் படைப்பிரிவு வீரர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும். உடல் நிலை அல்லது மருத்துவ காரணங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு ரீதியான காலியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை விளம்பர அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்படும் முறை:
முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, அனைத்து தேர்வர்களுக்கும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். 12 வாரம் முடிந்த கர்ப்பிணி பெண்கள் இத்தேர்வில் இதில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள். இதில், தேர்வு பெற்றவர்கள் மருத்துவ தகுதித் தேர்வு, ட்ரெட்ஸ்மேன் தேர்வு, எழுத்துத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள், நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.