6 மாதம்.. நண்பர்களுடன் சேர்ந்து தோழியை பலாத்காரம் செய்த நடன ஆசிரியர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்வபம்!!

 
Rape

கர்நாடகாவில் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி முன்னாள் காதலியை தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து  கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ் (28). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். பின்னர் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

rape

இந்த நிலையில் அந்த வாலிபர், தனது காதலியான இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து பெண்ணை மிரட்டி உள்ளார். மேலும் இதுபோல் மிரட்டி பெண்ணை பலமுறை கற்பழித்து வந்துள்ளார்.

மேலும் அவர் தனது காதலியை தனது நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கி உள்ளார். பின்னர் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்களை அந்த கும்பல் சமூக வலைதளங்களில் பதிவிட்டது. இதுகுறித்து அறிந்த அந்த பெண், கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Police

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோர் என்பதும் ஜார்ஜ் தான் பெண்ணின் காதலன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து ஜார்ஜ் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பென்டிரைவ் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

From around the web