மத்திய ரயில்வேயில் 548 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் கோட்டம் 1961 அப்ரண்டிஸ் சட்டம் கீழ் Trade Apprenticeship பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் பெயர் : Trade Apprenticeship
பணியிடங்கள் : 548
கல்வி தகுதி :
10+2 முறையின் கீழ் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD-க்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 03.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.06.2023