5,000 காலி பணியிடங்கள்.. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தான் சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி Apprentice பிரிவில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 230 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்கள் பிற மாநிலங்களில் காலியாக இருக்கின்றன.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
பணி இடம்: இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்: 5,000
விண்ணப்பிப்பது எப்படி?
Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நிரந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணி காலம்: இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.04.2023