5 ஆயிரம் கார் திருட்டு, பல கொலைகள்.. 3 மனைவிகளுடன் உல்லாசம்! `பலே’ கார் திருடன் கைது!!

 
Delhi

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடிய இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடனை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

டெல்லி கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த அனில் சவுகான்(52), பேதிய வருமாணம் கிடைக்காததால், 1995-ம் ஆண்டு முதல் கார்களைத் திருடத் தொடங்கினார். பொழுது போக்கிற்கு கார்களைத் திருட ஆரம்பித்த அனில், பின் அதையே தொழிலாக மாற்றியுள்ளார். குறிப்பாக மாருதி 800 கார்களை அதிகமாக திருடி விற்றுள்ளார். அப்படி திருடும் போது கார் ஓட்டுநர்களையும் கொலை செய்துள்ளார்.

delhi

டெல்லியில் தொடர்ச்சியாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் அசாம் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்தபடியே டெல்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இவர் மீது அமலாக்க இயக்குநரகமும் பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அனில் சவுகான் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அனில், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்ததில் இருந்து ஆயுதங்களைக் கடத்தி வடகிழக்கு மாநிலங்களில் செய்யப்பட்ட அமைப்புகளுக்கு விற்றுள்ளார். இவர் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசபந்து குப்தா சாலையில் மத்திய டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அனில் சவுகானை இன்று கைது செய்தனர்.

arrest

இந்தியாவின் மிக பெரிய கார் திருடனான அனில் 5 ஆயிரம் கார்களைத் திருடியதாக போலீசார் கூறுகின்றனர். அனிலுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அசாமில் இருந்த போது, உள்ளூர் அரசியல்வாதிகள் உடன் நல்ல உறவு வைத்துக் கொண்ட அவர், அரசு ஒப்பந்தங்கள் தனக்கு வருவது போல பார்த்துக் கொண்டார். அவரிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டனர்.

From around the web