லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப பலி!! பிறந்தநாள் விழாவில் பங்கேற்று திரும்பியபோது சோகம்

 
Karnataka

கர்நாடகாவில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் கூகனூர் தாலுகாவில் உள்ள பின்யல் கிராமத்தில் வசித்து வருபவர் தேவப்பா கூப்பட் (62). இவர் தனது உறவினரின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் அங்கேற்பதற்காக கொபல் நகருக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். இவருடன் அவரது உறவினர்கள் 9 பேர் சென்றுள்ளனர்.

Karnataka

இந்த நிலையில், பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு காரில் 8 பேரும் வீடு திரும்பியுள்ளனர். இரவு 11 மணி அளவில் பஹன்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

karnataka

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு குக்கனூர் மற்றும் கொப்பளத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web