495 காலி பணியிடங்கள்.. ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை... இன்று முதல் 4 நாட்கள் நேர்கானல்

சென்னை ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 495 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாளை முதல் நேர்காணல் நடைபெறுகிறது.
பணியின் பெயர்:
Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman
மொத்த பணியிடங்கள்: 495
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Graduate, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வாடிக்கையாளர் சேவை அதிகாரி - ரூ. 25,980
ஜூனியர் வாடிக்கையாளர் சேவை அதிகாரி - ரூ. 23,640
Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver - ரூ. 25,980
Handyman - உதவியாளர் - ரூ. 23,640
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்: Ex-servicemen/ SC/ ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.aiasl.in/resources/Advertisement%20of%20Chennai%20Recruitment.pdf என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தின் முகவரி:
Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai -600043
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விவரம்
Customer Service Executive: 17.04.2023
Jr. Customer Service Executive: 18.04.2023
Ramp Service Executive / Utility Agent Cum Ramp Driver: 19.04.2023
Handyman : 20.04.2023