450 காலிப்பணியிடங்கள்.. NIACL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. உடனே விண்ணப்பிங்க!

 
NIACL

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) ஆனது அகில இந்திய அளவில் Administrative Officers (Generalists & Specialists) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஒன்றிய அரசு பணிக்கு என மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் newindia.co.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21-08-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் பெயர்: Administrative Officers (Generalists & Specialists)

காலிப்பணியிடங்கள்: 450 (Risk Engineer  - 36, Automobile Engineer  - 96, Legal  - 70, Accounts  - 30, Health - 75, IT - 23, Generalists - 120)

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் CA, B.E அல்லது B.Tech, BAMS, BHMS, BDS, MBBS, M.E அல்லது M.Tech, MCA, M.D, M.S, MDS, முதுகலை பட்டப்படிப்பை ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் முடித்திருக்க வேண்டும்

jobs

Risk Engineer: Graduation, Post Graduation

Automobile Engineer: BE/ B.Tech/ ME/ M.Tech in Automobile Engineering, Graduation/ Post Graduation in Mechanical Engineering

Legal: Graduation/ Post Graduation in Law

Accounts: CA, Graduation/ Post Graduation

Health: BAMS, BHMS, BDS, MBBS, MD, MS, MDS, Post Graduation Medical Degree

IT: BE/ B.Tech/ ME/ M.Tech in IT/ CS, MCA

Generalists: Graduation, Post Graduation

வயது வரம்பு:

01.08.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். OBC (NCL) விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் - ரூ.100, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.850.

தேர்வு செயல் முறை:

Preliminary Examination, Main Examination (Objective + Descriptive), Interview

application

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 50,925 முதல் ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் NIACL அதிகாரப்பூர்வ இணையதளமான newindia.co.in இல் ஆன்லைனில் 21.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2023

From around the web