விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் பலி!! அரியானாவில் சோகம்

 
Haryana

அரியானாவில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பஹதுர்கரில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுகுறித்து டிசி சக்தி சிங் கூறுகையில், தொழிலாளர்கள் 5 அடி ஆழமுள்ள தொட்டியை சுத்தம் செய்வதற்காக கீழே இறங்கியதாகவும், இதன் காரணமாக 4 தொழிலாளர்கள் உயிர் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

haryana

தொழிலாளர்களின் உடல்கள் தொட்டியில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எஸ்பி வாசிம் அக்ரம் தெரிவித்தார். 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர் கூறினார். 

dead

மேலும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு புகார்கள் கிடைத்தவுடன் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

From around the web